Sri Lanka Good Night In Tamil | Sri Lankan Tamil Good Night messages | Good Night Kavithai In Tamil | Good Night Quotes In Tamil | Tamil Good Night Love Wishes Messages Sri Lanka



ஒரு பெரிய கள்ளன்

உங்கள் பாதி வாழ்நாளை
கொள்ளையடிக்கிறான்
தூக்கம்! இனிய இரவு வணக்கம்.

இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
சில நினைவுகள் உறங்க விடுவதில்லை
இனிய இரவு வணக்கம்.  

நிலவை பார்க்கும் போது
நீ தூரமாய் இருப்பதாய் உணர்கிறேன்
என் நிழலை பார்க்கும் போது
நீ என்னோடு இருப்பதை உணர்கிறேன்.
இனிய இரவு வணக்கம்.

நம் கவலை மூட்டைகளை
இறக்கி வைக்க தருணம் தரும் இரவு!
இனிய இரவு வணக்கம்.

குட்டி இரவில்
செல்ல தூக்கத்தில்
சின்ன கனவு காணும்
செல்ல இதயத்திற்கு
சின்ன மனசு சொல்லும்
இரவு வணக்கும்.

கற்பனை கனவு கலைந்துவிடும் என்று தெரிந்தும்
கண்கள் கனவு காண பயணிக்கிறது.
இனிய இரவு வணக்கம்.

தொட்டு தொட்டு ரசிக்கும் கண் இமைகளை
கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம்.

அணைந்து போன கனவுகளை
சரி செய்ய இந்த இதமான இரவு.
இனிய இரவு வணக்கம்.

இரவின் மடியினில்
விழிகளை மூடி
கவலைகளை மறந்து
தூங்கிடுவோம்.
இனிய இரவு வணக்கம்.

எத்தனை நட்சத்திரம்
மினுமினுத்தாலும் ஏனோ
மனம் ஏங்குகிறது
வராத அந்த ஒரு நிலவுக்காக.
இனிய இரவு வணக்கம்

நீயும் நானும் நம் காதலை தொடர
இந்த இரவு தொடராதா
வேண்டி கொள்கிறேன்
இந்த இரவு விடியாமல் இருக்க.

விடியும் என்று விண்ணை நம்பு
முடியும் என்று உன்னை நம்பு.

முடியும் இந்த இரவு
நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்
ஆரம்பமாய் மலரும் காலை
நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்.
இனிய இரவு வணக்கம்.

நேற்று வந்த மேகங்கள்
இன்று வானில் இல்லை
இன்று வந்த சோகங்கள்
நாளை நம்மை தொடராது.
இனிய இரவு வணக்கம்.

இருளாலும் மறைக்க இயலாத
ஒளிர்மதி இவள்.
இருளின் அழகை
கண்களில் காட்சியளிக்கிறது
நட்சத்திர கூட்டங்கள்.
இந்த அழகிய இரவை
அமைதியாக ரசித்துடுங்கள்.
இனிய இரவு வணக்கம்.